24 6639a7a77c018
உலகம்செய்திகள்

வாக்களித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

Share

வாக்களித்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், கடந்த மாதம் 19 -ம் திகதி மற்றும் 26-ம் திகதியில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இந்நிலையில், இன்று உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா , மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் உட்பட்ட 93 தொகுதிகளில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். அப்போது, பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, “மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகமான வாக்குகள் பதிவாக வேண்டும். மக்கள் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும்.

மேலும், வெயில் அதிகமாக இருப்பதால் அதிகளவு தண்ணீரை குடிக்க வேண்டும். தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பான ஏற்பாடுகளை செய்திருக்கும் தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...