2 21 scaled
உலகம்செய்திகள்

லண்டனில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்… வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

Share

லண்டனில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்… வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

லண்டனில் நேற்று முன்தினம் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்ணின் பெயர் முதலான சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4.10 மணியளவில், லண்டனிலுள்ள Croydonஇல் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.

ஆம்புலன்ஸ், மருத்துவ உதவிக்குழுவினருடன் விரைந்த பொலிசார், அந்த வீட்டில் 19 வயது இளம்பெண் ஒருவர், கத்திக்குத்துக் காயங்களுடன் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவ உதவிக்குழுவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் பெயர் மேஹாக் ஷர்மா (Mehak Sharma) என்றும், சமீபத்தில்தான் அவர் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த துயர சம்பவம் தொடர்பாக, அதே வீட்டிலிருந்த 23 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய பெயர் சாஹில் ஷர்மா என்றும், அவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமானவர் என்றும் கூறப்படுகிறது.

சாஹில் ஷர்மா இன்று Wimbledon நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். அத்துடன், மேஹாக் ஷர்மாவின் உடலுக்கு இன்று சிறப்பு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

பொலிசார் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்துக்குரிய வகையில் பொதுமக்கள் யாராவது இந்த வழக்கு தொடர்பில் எதையாவது பார்த்திருந்தால், அல்லது கேட்டிருந்தால் உடனே தங்களுக்கு தெரிவிக்க முன்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...