டுவிட்டரின் புதிய தலைமை அதிகாரியான இந்தியர்!!

202111300734514039 Parag Agrawal becomes Twitter CEO SECVPF
டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  ஜாக் டோர்சி நேற்று அந்த பதவியை  ராஜினாமா செய்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தன.

இந்தியாவை பூர்விகமாக கொண்ட பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர். இவர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

டுவிட்டரில் ஆயிரத்துக்கும் குறைவான பணியாளர்கள் இருந்த போது பணியில் சேர்ந்த பராக் கடின உழைப்பால் படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

 

Exit mobile version