1 21 scaled
உலகம்செய்திகள்

லொட்டறியில் பெருந்தொகை பரிசை அள்ளி கண்கலங்கிய இந்தியர்

Share

லொட்டறியில் பெருந்தொகை பரிசை அள்ளி கண்கலங்கிய இந்தியர்

இந்தியாவின் மராட்டிய மாகாணத்தை சேர்ந்த நபர் பிழைப்புக்காக ஐக்கிய அமீரகம் சென்றிருந்த நிலையில், நீண்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு நெகிழ்ச்சி திருப்பமாக லொட்டறியில் ரூ.55 லட்சம் வென்றுள்ளார்.

மராட்டிய மாகாணம் மும்பை நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் சேவியர் பெர்னாண்டஸ். கடந்த 1996ல் பிழைப்புக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சென்றுள்ளார். துபாய் மாகாணத்தில் புதிய வாழ்க்கையை தேடிய அவருக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு சேவை நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது.

தற்போது, நீண்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு, நெகிழ்ச்சி திருப்பமாக MEGA7 லொட்டறியில் இரண்டாவது பரிசாக Dh250,000 அள்ளியுள்ளார். இதற்கு முன்னர் பலமுறை சிறிய தொகைகளை லொட்டறியில் வென்றிருந்தாலும், பெருந்தொகையை பரிசாக வெல்வது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ளார்.

லொட்டறி நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்த அடுத்த சில நிமிடங்களில் தமது அன்பு மனைவிக்கு தெரியப்படுத்தியதாகவும், அந்த தொகையை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார் எனவும் அலெக்ஸ் சேவியர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

MEGA7 லொட்டறியில் முதல் பரிசான ரூ.226 கோடியை இதுவரை தனியாகவோ, குழுவாகவோ மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாட்டவர்களில் எவரும் வென்றதில்லை என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...