2 14
உலகம்செய்திகள்

படிக்கவைப்பதாக அழைத்துவந்து கொடுமைப்படுத்திய இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறை

Share

படிக்கவைப்பதாக அழைத்துவந்து கொடுமைப்படுத்திய இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறை

இந்தியாவிருந்து உறவினர் ஒருவரை அமெரிக்காவில் படிக்கவைப்பதாக அழைத்துவந்து கொடுமைப்படுத்திய இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளி தம்பதியினர், தங்கள் உறவினர்களில் ஒருவரை பாடசாலையில் படிக்கவைப்பதாக கூறி அமெரிக்காவிற்கு அழைத்து வந்து பெட்ரோல் பம்ப் மற்றும் ஜெனரல் ஸ்டோரில் கட்டாயப்படுத்தி 3 ஆண்டுகள் வேலை செய்யவைத்துள்ளனர்.

அமெரிக்க நீதிமன்றம் இந்த தம்பதிக்கு 11.25 ஆண்டுகள் (135 மாதங்கள்) சிறைத்தண்டனை விதித்துள்ளது.

31 வயதான இந்திய அமெரிக்க குடிமகன் ஹர்மன்பிரீத் சிங் (Harmanpreet Singh) மற்றும் அவரது 43 வயது மனைவி குல்பீர் கவுர் (Kulbir Kaur) ஆகியோர் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.87 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹர்மன்ப்ரீத்தும் குல்பீரும் இப்போது விவாகரத்து பெற்றனர்.

செய்தி நிறுவனமான PTI-யின் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தவறான வாக்குறுதிகளின் பேரில் தங்கள் உறவினரை அமெரிக்காவிற்கு அழைத்து வந்துள்ளனர்.

அதன் பிறகு, அவர்கள் அந்த நபரின் கடவுச்சீட்டு மற்றும் குடியேற்ற ஆவணங்களை பறித்து வைத்துக்கொண்டுள்ளனர்.

மேலும், அவரை சித்திரவதை செய்து, தங்களது கடையில் மணிக்கணக்கில் வேலை செய்ய வைத்துள்ளனர். அந்த வேலைக்கு அவருக்கு மிகக் குறைந்த பணமே வழங்கப்பட்டுள்ளது.

தம்பதிகள் பாதிக்கப்பட்ட அந்த அண்ணாத்துரை 12-17 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய வைத்துள்ளனர்.

மேலும் அவர் வேலையை விட்டு வெளியேற முயற்சித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் மார்ச் 2018 முதல் மே 2021 வரை வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.

அவர் சுத்தம் செய்தல், சமைத்தல், கடையில் பொருட்களை சேமித்தல், பணப் பதிவேட்டைக் கையாளுதல் போன்ற வேலைகளைச் செய்ய வைக்கப்பட்டுள்ளார்.

12-17 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தாலும், பதிலுக்கு, அவருக்கு சரியான உணவு கூட வழங்கப்படவில்லை.

மேலும், அவர் மருத்துவம் மற்றும் கல்வி வசதிகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்.

கடையில் பொருத்தப்பட்டிருந்த கமெரா மூலம் அவரைத் தம்பதியினர் கண்காணித்துவந்துள்ளனர். அவர் இந்தியா செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்டவரின் விசா காலாவதியான பிறகு, குல்பீர் கவுரை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அவர் தப்பி ஓட முயன்றால், அவரது குடும்பத்தினரின் பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் பறித்துவிடுவோம் என்று குல்பீர் மிரட்டியுள்ளார்.

அவர்கள் அவரது தலைமுடியை இழுத்து உதைத்தனர். இது தவிர, பாதிக்கப்பட்டவர் விடுப்பு கேட்டபோது, ​​துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
14 4
இலங்கைசெய்திகள்

வடக்கில் விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய தடை

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வடக்கு மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத்...

15 4
இலங்கைசெய்திகள்

தாஜூதீன் கொலை: வெகுவிரைவில் நாட்டிற்கு வெளிப்படுத்தப்படவுள்ள விடயம் – பிரதியமைச்சர் தகவல்

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால் சிலர் கலக்கமடைந்துள்ளனர், அந்த...

13 8
இலங்கைசெய்திகள்

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் உதவிகோரியுள்ள பொலிஸார்

கடந்த 6 நாட்களாக காணாமல்போயுள்ள முதியவர் ஒருவரை கண்டுபிடிக்க ராகமை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்....

12 8
இலங்கைசெய்திகள்

இந்த ஆண்டில் இதுவரையில் 425 பெண்களுக்கு சிறைத்தண்டனை

இந்த ஆண்டில் இதுவரையில் 425 பெண்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய தினம் நாடாளுமன்றில்...