tamilnaadi 21 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் புலம்பெயர்வோருக்கு அதிகரிக்கப்படவுள்ள கட்டணம்

Share

பிரித்தானியாவில் புலம்பெயர்வோருக்கு அதிகரிக்கப்படவுள்ள கட்டணம்

பிரித்தானியாவில் புலம்பெயர்வோருக்கான மருத்துவ கட்டணம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி முதல், அதிகரிக்க உள்ளது.

பிரித்தானியாவில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி கொண்டு வரப்பட்ட புதிய சட்டம் ஒன்றின்கீழ், பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோருக்கான மருத்துவ கட்டணம் அதிகரிக்க உள்ளது.

அந்த சட்டத்தின்படி, பிரித்தானியாவுக்கு புலம்பெயர்வோர், மருத்துவ கட்டணமாக ஆண்டொன்றிற்கு 1,035 பவுண்டுகள் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த கட்டணம் தற்போது 624 பவுண்டுகளாக உள்ள நிலையில், இம்மாதம் 6ஆம் திகதியிலிருந்து இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

அதேபோல், 18 வயதுக்குக் குறைவான மாணவர்கள் தற்போது 470 பவுண்டுகள் கட்டணம் செலுத்தும் நிலையில், 6 ஆம் திகதி முதல் அது ஆண்டுக்கு 776 பவுண்டுகளாக உயர உள்ளது.

இது, தற்போதுள்ள கட்டணத்தைவிட 66 சதவிகித அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்படுகிறது.

பிரித்தானியாவுக்கு புலம்பெயர விண்ணப்பம் செலுத்தும்போதே இந்தக் கட்டணத்தையும் புலம்பெயர்வோர் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...