கனடா பெண்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்!
கனடாவில் (Canada) மார்பகப் புற்றுநோய் தொடர்பில் பெண்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கனடாவின் அனைத்து மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பெண்கள் மார்பகப் புற்றுநோய் குறித்த பரிசோதனைகளை 40 வயதிலிருந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தலை கனேடிய புற்றுநோய் அமைப்பு வழங்கியுள்ளது.
கனடாவின் சில மாகாணங்களில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களிடமிருந்து மமாகிராம்ஸ் பரிசோதனை நடத்தப்படுகின்றன.
அத்துடன், கனடாவின் பல பகுதிகளில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், தற்போது மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
கனடா முழுவதிலும் உள்ள பெண்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள சமசந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் அடையாளம் காணுவதன் மூலம் எளிமையான வழிகளில் சிகிச்சை அளிக்கப்பட முடியும் என புற்றுநோய் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

