8 34
உலகம்செய்திகள்

ஆண்டுகளில் முதல் முறையாக… புலம்பெயர் மக்கள் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

Share

ஆண்டுகளில் முதல் முறையாக… புலம்பெயர் மக்கள் தொடர்பில் கனடா எடுத்துள்ள முடிவு

கடந்த பல வருடங்களில் முதன்முறையாக நாட்டுக்குள் அனுமதிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா வெகுவாகக் குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மக்களிடையே செல்வாக்கு சரிந்துவரும் நிலையில், ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் ட்ரூடோ அரசாங்கம் எடுக்கும் ஒரு முடிவாகவே இது பார்க்கப்படுகிறது.

 

மேலும், 2025ல் நிரந்தர வதிவிட அனுமதி 395,000 பேர்களுக்கும் 2026ல் 380,000 பேர்களுக்கும் 2027ல் 365,000 பேர்களுக்கும் என படிப்படியாக குறைக்க உள்ளது. 2024ல் இந்த எண்ணிக்கை 485,000 என இருப்பதாகவே அரசாங்க தரவுகளில் இருந்து தெரிய வருகிறது.

 

மட்டுமின்றி, தற்காலிக வதிவிட அனுமதி எண்ணிக்கையை 300,000ல் இருந்து 2025ல் 30,000 என தடாலடியாக குறைக்க உள்ளது. பொதுவாக புலம்பெயர் மக்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் நாடுகளில் கனடாவும் ஒன்று.

 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக புலம்பெயர் மக்கள் மீதான கனடாவின் அணுகல் சரிவடைந்து காணப்படுகிறது. பெரும்பாலும் இது அரசியல் நோக்கங்களுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

 

மேலும், கனடாவில் ஏற்பட்டுள்ள குடியிருப்பு பற்றாக்குறைக்கு காரணம் புலம்பெயர் மக்கள் என்றே பரவலாக குற்றஞ்சாட்டப்படுகிறது. மட்டுமின்றி, விலைவாசி உயர்வுக்கும், சுகாதார அமைப்புகள் அவநம்பிக்கையான நிலைக்கு தள்ளப்பட்டதற்கும் காரணம் புலம்பெயர் மக்கள் என்றே குறிப்பிட்ட கனேடிய மக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.

 

அக்டோபர், 2025க்குப் பிறகு பெடரல் தேர்தல் நடைபெறவுள்ளதால், கனேடிய அரசியலில் இந்தப் பிரச்சினை மிகவும் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

 

மட்டுமின்றி, வெளிவரும் கருத்துக்கணிப்புகளில் கனேடிய மக்கள்தொகையில் புலம்பெயர் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றன.

Share
தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...