நான் கைதாக போகிறேன்! – கதறும் டிரம்ப்

donald trump

donald-trump

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் (வயது 76) சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், “நியூயார்க் மன்ஹாட்டன் அரசு வக்கீல் அலுவலகத்தில் இருந்து வெளியான சட்ட விரோத தகவல் கசிவுகள், அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசு கட்சியின் முன்னணி வேட்பாளராக உள்ள முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் வரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படுவார் என தெரிவிக்கின்றன” என்று கூறி உள்ளார்.

இதை எதிர்த்து போராடுமாறு தனது ஆதரவாளர்களை டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். டிரம்பை கைது செய்து குற்றம்சாட்டுவதற்கான வாய்ப்பு உள்ளதால் அங்கு சட்ட அமலாக்கல் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#world

Exit mobile version