சோதனை ஓட்டத்தின்போதே டைட்டனுக்கு நேர்ந்த ஆபத்து!
உலகம்செய்திகள்

சோதனை ஓட்டத்தின்போதே டைட்டனுக்கு நேர்ந்த ஆபத்து!

Share

சோதனை ஓட்டத்தின்போதே டைட்டனுக்கு நேர்ந்த ஆபத்து!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே டைட்டன் நீர்மூழ்கியை மின்னல் தாக்கியதாக ஓஷன் கேட்டின் சிஇஓ வெளிப்படுத்தியுள்ளார்.

டைட்டானிக் கப்பலை காண சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் தொழில்நுட்ப நிறுவனமான Teledyne Marine கடலுக்கடியில் நேர்காணலின்போது மின்னல் தாக்கிய சம்பவத்தை, Ocean Gate சிஇஓ ஸ்டாக்டன் ரஷ் விவாதிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், டைட்டனில் குறைபாடு உள்ள பாகங்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக தீர்க்கப்பட்டதாக Teledyne Marineயிடம் ரஷ் எடுத்துரைத்தார்.

மின்னல் தாக்கியது குறித்து அவர் கூறும்போது, அதிர்ஷ்டவசமாக நேரடியான தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்றும், கார்பன் ஃபைபரில் நேரடியாக தாக்கியிருந்தால் முழுவதுமாக அழிக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் ரஷ், 100 சதவீத பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், டைட்டனை முழுமையாக சோதித்து அனைத்தையும் சரிபார்க்க விரும்பியதாகவும் அதில் குறிப்பிட்டார்.

எனினும் Connectors, Penetrators, Wiring ஆகியவற்றில் சிக்கல்கள் இருந்ததாக குறிப்பிட்ட ரஷ், மின்னல் வித்தியாசமான விடயங்களை செய்யும் எனவும், அது தங்கள் சோதனையை பின்னுக்குத் தள்ளியதால் அவர்கள் அதை ரத்து செய்ய வேண்டியிருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.

நீர்மூழ்கி குறித்த வீடியோவில், அவர்கள் எதிர்கொள்ளும் அபாயங்கள் பற்றிய முழுமையான தகவல்களை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குவதன் முக்கியத்துவத்தை ரஷ் வலியுறுத்தியதுடன், இது ஒரு ஆபத்தான சூழலில் உள்ள சோதனை நீர்மூழ்கி என்று குறிப்பிட்டார்.

இச்சம்பவம் 2018யில் ஆழ்கடல் சோதனை அமர்வின்போது, பஹாமாஸில் உள்ள மார்ஷ் துறைமுகத்திற்கு அருகில் நடந்ததாக கருதப்படுகிறது. மேலும், ரஷ் பேசிய வீடியோ Metadata’வின் விசாரணையில் 2020ஆம் ஆண்டில் பதிவேற்றப்பட்டது என தெரிய வந்துள்ளது.

OceanGateயின் இன்ஸ்டாகிராம் இடுகையில், ‘மின்னலின் தாக்குதலினால் நீர்மூழ்கியின் உள் அமைப்புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை பாதிக்கப்பட்டது’ என கூறப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...