9 34
உலகம்

“என் மீதான கொலை முயற்சிக்கு” ஈரான் தான் காரணம்: ட்ரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு

Share

“என் மீதான கொலை முயற்சிக்கு” ஈரான் தான் காரணம்: ட்ரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு

அமெரிக்கா (United States) நலனுக்கு இடையூறு செய்தால், ஈரானை (Iran) அடித்து நொறுக்குவேன்,” என ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

நவம்பர் 05 ஆம் திகதி நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் மீது அடுத்தடுத்து கொலை முயற்சிகள் நடந்து வருவது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஈரானால், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்து உள்ளனர். இந்நிலையில் வடக்கு கரோலினாவில் நடந்த தேர்தல் பிரசாரம் ஒன்றில் “என்னை கொலை செய்ய இரண்டு முறை முயற்சி நடந்தது.

அதில் ஈரான் நாட்டுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. நான் அதிபராக ஜனாதிபதியாக, உங்களை எச்சரிக்கும் வகையில் எனது நடவடிக்கை இருந்து இருக்கும்.

முன்னா ஜனாதிபதிகளையோ அல்லது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையோ கொலை செய்ய முயற்சித்தால், ஈரானை அடித்து நொறுக்குவேன்” என எச்சரித்துள்ளார்.

பலஸ்தீனத்தின் (Palestine) மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்டதும், அதற்கு இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று அமெரிக்கா ஈரானுக்கு அழுத்தம் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
8
இலங்கைஉலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல்

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது...

Murder Recovered Recovered Recovered 15
உலகம்செய்திகள்

ஈரானின் திடீர் முடிவு.. சர்வதேசத்திடமிருந்து அணுசக்தி தகவல்களை மறைக்க திட்டம்!

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்திற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்...

Murder Recovered Recovered Recovered 11
உலகம்செய்திகள்

தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளான சோமாலிய விமானம் : மூவர் பலி

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

Murder Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

கனடா பெண்ணுக்கு யாழில் நேர்ந்த சோகம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம்(02) உயிரிழந்துள்ளார். கண்டி...