வானில் தென்படும் அரிய காட்சி: மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு!

17 6

வெற்று கண்ணுக்குத் தெரியும் எய்டா அக்வாரிட்ஸ் விண்கல் மழையை இலங்கையில் நாளை (06) காணலாம்.

இந்த விண்கல் மழை, நாளை (06) அதிகாலை 1.00 மணிக்குத் தொடங்கி அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை உச்சத்தை அடையும் என தெரிவிக்கப்படுகிறது.

வானியலாளர் கிஹான் வீரசேகரவின் கூற்றுப்படி, இந்த அரிய அண்ட நிகழ்வு, அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை கிழக்கு வானில் இலங்கைக்கு சிறப்பாகத் தெரியும்.

ஈட்டா அக்வாரிட் விண்கல் மழை, ஹாலியின் வால் நட்சத்திரம் விட்டுச் சென்ற குப்பைகளிலிருந்து உருவாகிறது, இது ஒரு குறுகிய கால வால் நட்சத்திரமாகும், இது ஒவ்வொரு 76 வருடங்களுக்கும் சூரியனைச் சுற்றி ஒரு பெரிய சுற்றுப்பாதையை நிறைவு செய்கிறது.

இந்த ஆண்டு காணக்கூடிய முக்கிய விண்கல் மழை இதுவாகும்.

Exit mobile version