சவுதிஅரேபியாவின் எல்லையில் உள்ள அபா சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர்.
குறித்த தாக்குதலிற்கு ஏமன் கிளர்ச்சி படையான ஹவுதி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த, சவுதி அரேபியா , மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைந்து ஏமனுக்கு ராணுவ ரீதியான உதவிகளை வழங்கி வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சவூதி அரேபியாவின் எல்லை மாகாணங்கள் மீது அடிக்கடி ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை ஹவுதி கிளர்ச்சி யாளர்கள் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 17ந் தேதி அன்று அபுதாபியில் கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#WorldNews
Leave a comment