உலகம்செய்திகள்

பல டன் தங்கம் வைரமுடன் மூழ்கிய கப்பல்… 300 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு: மலைக்க வைக்கும் அதன்மதிப்பு

Share
24 65fbe30b76237
Share

பல டன் தங்கம் வைரமுடன் மூழ்கிய கப்பல்… 300 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு: மலைக்க வைக்கும் அதன்மதிப்பு

கரீபியன் கடற்பகுதியில் 300 ஆண்டுகளாக மூழ்கியுள்ள உலகின் மிகவும் மதிப்புமிக்க புதையலை நிபுணர்கள் குழு மிக விரைவில் வெளியே எடுக்க உள்ளனர்.

ஸ்பானிய கப்பலான San Jose டன் கணக்கிலான தங்கம், வெள்ளி, மரகதங்களுடன் புறப்பட்ட நிலையில், 1708ல் பிரித்தானிய போர் கப்பலால் மூழ்கடிக்கப்பட்டது. குறித்த கப்பலில் குவிந்துகிடக்கும் புதையலின் தற்போதைய மதிப்பு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் ரூ 14,12,87,85,00,000) என்றே கூறப்படுகிறது.

தற்போது கொலம்பியாவில் உள்ள நிபுணர்கள் தரப்பு அந்த கப்பலில் இருந்து முதல் தொகுப்பை இன்னும் சில நாட்களில் மீட்டெடுக்க உள்ளனர். கடந்த 2015ல் தான் தொடர்புடைய கப்பலை நிபுணர்கள் தரப்பு கண்டு பிடித்துள்ளதுடன், அது 2,000 அடி ஆழத்தில் காணப்படுவதாகவும் உறுதி செய்தனர்.

ஆனால் அந்த எதிர்பாராத புதையலுக்கு தற்போது ஸ்பெயின், கொலம்பியா, பொலிவியா மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் சொந்தம் கொண்டாடுகின்றன. இந்த நிலையில், புதையலை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் சண்டை வேண்டாம் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை வெளியான தரவுகள் அடிப்படையில், 1708ல் பெரும் புதையலுடன் San Jose கப்பலும் 14 வணிக கப்பல்களும் 3 ஸ்பானிய போர்கப்பல்களும் பனாமாவில் இருந்து புறப்பட்ட நிலையில், Barú பகுதி அருகே பிரித்தானிய போர் கப்பலை எதிர்கொண்டுள்ளது.

இதில் San Jose என்ற கப்பல் கடலில் மூழ்கியது. 600 பேர்கள் பயணித்த அந்த கப்பலில் இருந்து வெறும் 11 பேர்கள் மட்டும் தப்பினர். 2015 வரையில் அந்த கப்பல் மூழ்கிய இடம் மர்மமாகவே இருந்து வந்தது.

ஆனால் கொலம்பிய அரசாங்கமே, தங்கள் நிபுணர்கள் குழு குறித்த கப்பலை அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்தனர். தற்போது ஏப்ரல் மாதத்தில் அந்த 200 டன் புதையலின் ஒருபகுதியை மீட்டுவர நிபுணர்கள் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...