கனடாவில் அதிக அளவு வதிவுரிமை பெற்றுக் கொள்வோர் பற்றிய தகவல்

24 667f7cfe0ff26

கனடாவில் அதிக அளவு வதிவுரிமை பெற்றுக் கொள்வோர் பற்றிய தகவல்

கனடாவில் அதிக அளவில் வதிவுரிமை அந்தஸ்தினை பெற்றுக் கொள்வோர் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

கனடாவில் வெளிநாட்டு பணியாளர்கள் அதிக அளவில் நிரந்தர வதிவிட உரிமையாளர்களாக மாறுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய ஆண்டுகளாக இந்த நிலை காணப்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 23 வீதமான வெளிநாட்டு பணியாளர்கள் நிரந்தர வதிவுரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக முதலாவது தொழில் உரிமத்தை பெற்றுக்கொண்டு இரண்டு ஆண்டுகளில் இவ்வாறு நிரந்தர வதிவுரிமையை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை 2011 முதல் 2015 ஆம் ஆண்டில் 12 வீதமாக காணப்பட்டது.

இதன்படி தற்காலிகமாக கனடாவில் வதிவோர் கூடுதல் எண்ணிக்கையில் நிரந்தர வதிவுரிமையை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய ஆண்டுகளில் வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரையில் 2.8 மில்லியன் தற்காலிக வதிவிட உரிமையாளர்கள் கனடாவில் வசித்து வருவதாகவும் இது மொத்த சனத்தொகையின் 6.8 வீதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version