கடும் பனிப்பொழிவு – 2,270 விமானங்கள் ரத்து!!

usa

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீரற்ற வானிலை நிலவுகிறது. கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனித்துகள் குவிந்துள்ளன. குளிர் வாட்டி வருவதால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று 2,270 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

வெள்ளிக்கிழமை செல்லும் 1000 விமானங்கள் ரத்தாகியுள்ளன. மேலும் விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக வந்தடைகின்றன. பனிப்பொழிவால் விமான சேவை தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பயணிகள் பாதிப்புக்கு இலக்காகினர்.

#world

Exit mobile version