ஸ்பெயினில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணத்தால் ஹூல்வா மற்றும் படாஜோஸ் மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஆண்டலூசிய மற்றும் அல்மென்ட்ரஜோ உள்ளிட்ட நகரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
தற்போது வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளன.
கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் மேலும் பாதிப்பு ஏற்படக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது.
இங்கு தொடர்ந்தும் மோசமான வானிலை நிலவி வருகிறமை குறிப்பிடத்தக்கது.