t3 74978201910141214
உலகம்செய்திகள்

சீமானுக்கு பயந்து வீடு கொடுக்கவில்லை! அம்மாவுக்கு இறுதிச்சடங்கு நடத்த விடவில்லை

Share

சீமான் மீதான வழக்கினை கர்நாடகாவில் தொடர உள்ளதாக நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார்.

அதன் பின்னர் பெங்களூருவிற்கு சென்ற அவர், கடந்த ஆகத்து மாதம் மீண்டும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

ஆனால், தனது புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், காவல்துறை நடவடிக்கை குறித்து தெரியவில்லை என்றும் விஜயலட்சுமி குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், விஜயலட்சுமி மீண்டும் ஆவேசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘திமுக என்னை வைத்து அரசியல் செய்வதாக நாம் தமிழர் கட்சியினர் கூறியபோது, ஆளுங்கட்சியான திமுக எந்த அளவுக்கு வழக்கில் தீவிரமாக விசாரித்து, எனக்கு நியாயம் வாங்கித் தந்திருக்க வேண்டும்? ஆனால், ஆகத்து முதல் ஜனவரி வரை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

சீமான் ஒருபக்கம்; நாம் தமிழர் கட்சியினர் ஒரு பக்கம் திமிர் பிடித்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். 12 ஆண்டுகளாக இந்த வழக்கில் நியாயம் கிடைக்காமல் பெண்ணான நான் கதறிக் கொண்டிருக்கிறேன். இது ஒன்றும் தீர்க்க முடியாத வழக்கு அல்ல. காவல்துறைக்கு தெரியும் இல்லையா? தமிழ்நாட்டில் சீமானுக்கு பயந்து வாழ்வதற்கு கூட யாரும் வீடு தரவில்லை. தூக்கி கர்நாடகாவில் போட்டார்கள். கர்நாடக தான் என்னை காப்பற்றியது.

எனது அம்மாவுக்கு இறுதிச் சடங்கு செய்ய விடாமல் தடுத்தார்கள். கர்நாடகாவில் பிறந்த ஒரே காரணத்திற்காக 12 ஆண்டுகளாக எனக்கு நியாயம் தேடி தராமல் அலைக்கழிக்கின்றனர். இதற்கு நான் முடிவு கட்டுவேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ‘கர்நாடகாவில் வழக்கு தொடர்ந்து உங்களுக்கெல்லாம் நான் அதிர்ச்சி கொடுக்க போகிறேன்’ எனவும் கூறியுள்ளார். விஜயலட்சுமியின் இந்த ஆவேசமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.