24 664e6448754a3
உலகம்செய்திகள்

கனடாவில் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கான மகிழ்ச்சி தகவல்

Share

கனடாவில் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கான மகிழ்ச்சி தகவல்

புலம்பெயர்தல் தொடர்பில் கனடாவின்(Canada) அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதன்முறையாக தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோருக்காக கனடா அரசு ஒரு நல்ல முடிவு எடுக்க இருப்பதாக கனடா புலம்பெயர்தல் அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்தல் தொடர்பில் கனடா என்ன செய்துவருகிறது என சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் சில தகவல்களை கூறியுள்ளார்.

கனடாவுக்கு தேவைப்படும் திறன்மிகுப் பணியாளர்களை தக்கவைப்பது தொடர்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதே நேரத்தில், கனேடியர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கான வேலைவாய்ப்புகளையும் பாதுகாப்பது குறித்தும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், அடுத்த கட்ட நடவடிக்கையாக, முதன்முறையாக, கனடாவின் வருடாந்திர புலம்பெயர்தல் திட்டத்தில், தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோரையும் இணைக்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, திறன்மிகுப் பணியாளர்களான தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோரை, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றோராக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ள விடயம், தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...