அவுஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான போண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சிட்னியில் விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் போண்டி கடற்கரைப் பகுதி.
மக்கள் கடற்கரையில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த நிலையில், அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 10 பேர் பலியாகியுள்ளனர்.
அவுஸ்திரேலியாவை உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்திற்கு அந்நாட்டுப் பிரதமர் அந்தோனி அல்பனீஸ் (Anthony Albanese) ஆழ்ந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தெரிவித்துள்ளார்.