tamilni 176 scaled
உலகம்செய்திகள்

கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய்

Share

கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய்

அமெரிக்காவில் பூசணிக்காய் வளர்க்கும் போட்டியில் உலகின் மிகப்பெரிய பூசணிக்காவுக்கு 30,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பூசணிக்காய் வளர்ப்பதில் விவசாயிகளுக்கு இடையே போட்டி நடைபெறுவது வழக்கமாக காணப்படுகிறது.

அந்தவகையில், கலிபோர்னியா மாநிலத்தில் ஹாஃப் மூன் பே (Half Moon Bay) பகுதியில் 50 ஆவது போட்டி நடைபெற்றுள்ளது.

இந்த போட்டியில், தங்களுடைய விவசாய நிலங்களில் பூசணிக்காய் வளர்க்கும் பல விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.

கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய் | Guinness World Record Pumpkin

இந்நிலையில் இந்தப்போட்டியில் கலந்து கொண்ட மின்னசோட்டா மாநிலத்தை சேர்ந்த தோட்டக்கலை வல்லுனரும், பயிற்சியாளருமான 43 வயதுடைய டிராவிஸ் கிரெய்கர் என்பவர் மிகப்பெரிய பூசணிக்காய் வளர்த்தமைக்காக போட்டியின் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருடைய பூசணிக்காயின் எடையானது 1,247 கிலோகிராம் ஆகும் என்பதுடன் இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பூசணிக்காய் வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
Weligama Incident 1200x675px 23 10 25
இலங்கைசெய்திகள்

வெலிகம தலைவர் கொலை: சந்தேக நபர்கள் குறித்த பல தகவல்கள் வெளியீடு; தென் மாகாணத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பான விசாரணை தற்போது வெற்றிகரமாக நடைபெற்று...

images 8
செய்திகள்இந்தியா

இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் Meta உடன் இணைந்து AI துறையில் நுழைவு: ‘Reliance Intelligence’ தொடங்கப்படுகிறது!

செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது பல துறைகளிலும் கால்பதித்து, ChatGPT மற்றும் Gemini போன்ற நிறுவனங்களால்...

Sea 1200px 22 05 24 1000x600 1
செய்திகள்இலங்கை

வங்காள விரிகுடாவில் ஆழமான தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்றானது தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு சுமார் 50 முதல்...

z p00 Namal Rajapaksa
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கொலைகள் அதிகரிப்பு குறித்து நாமல் ராஜபக்ஷ கவலை: சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டை இழக்கிறது!

இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் கொலைக் சம்பவங்கள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...