நடைபெற்று வரும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் (18.05.2025) போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியை 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீழ்த்தியது.
குறித்த போட்டி டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களை எடுத்தது.
டெல்லி கெப்பிட்டல்ஸ் சார்பில் 65 பந்துகளை எதிர்கொண்ட கே.எல்.ராகுல் 112 ஓட்டங்களை பெற்றார்.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ், 19 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை அடைந்தது.
குஜராத் டைட்டன்ஸ் சார்பில், சாய் சுதர்சன் 61 பந்துகளில் 108 ஓட்டங்களையும் சுப்மன் கில் 53 பந்துகளில் 93 ஓட்டங்களையும் பெற்றனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக சாய் சுதர்சன் தெரிவு செய்யப்பட்டார்.