உலகம்செய்திகள்

வாரத்தில் 6 நாள் வேலை திட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்த ஐரோப்பிய நாடு

Share

வாரத்தில் 6 நாள் வேலை திட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்த ஐரோப்பிய நாடு

உலகின் பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் வேலை நாட்களை குறைத்து உற்பத்தித்திறணை அதிகரிக்க முயன்று வரும் நிலையில், ஐரோப்பிய நாடொன்று 6 நாள் வேலை திட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்துள்ளது.

ஐரோப்பிய நாடான கிரேக்கத்திலேயே வாரத்தில் 6 நாட்கள் வேலை என்ற திட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்துள்ளனர். தொழிற்சங்கங்கள் கொடூரத்தின் உச்சம் என்றே இந்த திட்டத்தை குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, மற்ற எல்லா நாகரிக நாடுகளும் வாரத்தின் நான்கு நாட்கள் வேலை என்ற திட்டத்தை முன்னெடுக்க ஆலோசித்து வரும் நிலையில், கிரேக்கம் மட்டும் வேறு பாதையில் செல்ல முயல்வதாக எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் வணிக சார்பு கொள்கை கொண்ட பிரதமர் Kyriakos Mitsotakis தெரிவிக்கையில், குறைந்து வரும் மக்கள்தொகை மற்றும் திறமையான தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற இரட்டை ஆபத்துகளை எதிர்கொள்ள இந்த முயற்சி அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.

2009ல் இருந்தே பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும் கிரேக்கத்தில் இருந்து சுமார் 500,000 பேர்கள், பெரும்பாலும் பட்டம் பெற்ற இளைஞர்கள் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த 6 நாட்கள் வேலை என்பது, நாளில் 24 மணி நேரமும் இயங்கும் தனியார் தொழில்களுக்கு மட்டும் பொருந்தும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட்டிக்கப்பட்ட வேலை வாரத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட தொழில்கள் மற்றும் உற்பத்தி வசதிகளில் உள்ள ஊழியர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் அல்லது கூடுதல் எட்டு மணி நேர ஷிப்ட் வேலை செய்ய வாய்ப்பளிக்கப்படும்.

அத்துடன் தினசரி ஊதியத்துடன் சேர்த்து 40 சதவிகிதம் கூடுதல் தொகை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், போராட்டங்களும் வெடித்துள்ளன.

பெரும்பாலான கிரேக்க மக்களின் சராசரி மாத ஊதியம் என்பது 900 யூரோ, இது ஒவ்வொரு மாதமும் 20ம் திகதி வரையே போதுமானதாக உள்ளது என்றும் குறிப்பிடுகின்றனர்.

மேலும் தற்போதைய இந்த 6 நாள் வேலை திட்டம் என்பது தொழிலாளர் பற்றாக்குறை என்ற அடிப்படைப் பிரச்சனையைத் தீர்க்கப் போவதில்லை என்றும்

வேலையில்லாத இளம் கிரேக்கர்களுக்கு இது மிகவும் நியாயமற்றது எனவும் அவர்களுக்கு ஒருபோதும் வேலை கிடைக்கப் போவதில்லை என்றும் ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 101
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை முறிவு: போர் நிறுத்தத்தைத் தொடர ஆஸ்திரேலியா வலியுறுத்தல்!

இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத்...

world 103
விளையாட்டுசெய்திகள்

மதீஷா பத்திரானா உடற்தகுதி தேர்வில் வெற்றி: கேகேஆர் அணியில் இணைய பச்சைக்கொடி!

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரானா, இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) நடத்திய...

world 99
உலகம்செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் முட்டுக்கட்டை: அமைதி ஒப்பந்தம் இன்றி இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான நிபந்தனையை ஏற்க...