rtjy 92 scaled
உலகம்செய்திகள்

பிரபல நடிகர் மீது பல பெண்கள் அத்துமீறல் குற்றச்சாட்டு: கனடா அதிரடி

Share

பிரபல நடிகர் மீது பல பெண்கள் அத்துமீறல் குற்றச்சாட்டு: கனடா அதிரடி

பிரபல பிரெஞ்சு நடிகர் ஒருவர் மீது பல பெண்கள் புகாரளித்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், கனேடிய மாகாணம் ஒன்று அவருக்கு வழங்கிய உயரிய விருதொன்றை அதிரடியாக திரும்பப் பெற்றுள்ளது.

பிரபல பிரெஞ்சு நடிகரான Gérard Depardieu தங்களிடம் தவறாக நடந்துகொடதாக, நடிகைகள் உட்பட 13 பெண்கள் புகாரளித்துள்ளார்கள். அவற்றில் சில வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், Gérardஆல் பாதிக்கப்பட்ட நடிகைகளில் ஒருவரான Emmanuelle Debever என்னும் பெண், ஒரு வாரம் முன்பு பாரீஸிலுள்ள நதி ஒன்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

Emmanuelle தற்கொலை செய்துகொண்ட அதே நாளில், பிரெஞ்சு தொலைக்காட்சி ஒன்றில் ஆவணப்படம் ஒன்று வெளியானது. அது, Gérard மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையுடன் தொடர்புடைய ஆவணப்படமாகும்.

அந்த படத்தில், வடகொரியாவுக்குக் நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்த Gérard, பெண்கள் முன்பாகவே ஆபாசமாக ஒலி எழுப்பியதுடன், 10 வயது சிறுமி உட்பட குதிரை ஓட்டும் பெண்களைக் குறித்து மோசமாக விமர்சித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளதுடன், புகைப்படம் எடுக்கும்போதே, தான் தன் அருகே நிற்கும் ஒரு வடகொரிய பெண்ணின் பின்பக்கங்களைத் தொட்டுக்கொண்டிருப்பதாகவும் Gérard கூற, அதுவும் அதே வீடியோவில் பதிவானது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டுவருகிறது.

அந்த ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து, கனடாவின் கியூபெக் மாகாண பிரீமியரான François Legault, நடிகர் Gérardக்கு கியூபெக் மாகாணத்தால் வழங்கப்பட்ட உயரிய விருதான Ordre national du Québec என்னும் விருதைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

பெண்களை மோசமாக விமர்சிக்கும் Gérard, அந்த கௌரவம் மிக்க விருதுக்கு தகுதியானவரல்ல என்று கூறியுள்ள François Legault அலுவலகம், அவரது நைட் பட்டத்தைப் பறித்துள்ளது.

இந்த முடிவு உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் கியூபெக் மாகாண அரசு அறிவித்துள்ளது.

2002ஆம் ஆண்டு கியூபெக் மாகாண பிரீமியராக இருந்த Bernard Landry எபவரால் நடிகர் Gérardக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டது. கியூபெக்கில் இப்படி அந்த பட்டம் பறிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...