உலகம்செய்திகள்

கனடா செல்ல காத்திருப்போருக்கான அதிஷ்ரம்!

Share
download 18 1 4
Share

கனடா செல்ல காத்திருப்போருக்கான அதிஷ்ரம்!

கனடாவில் வாழும் ஆசையிலிருக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது கனேடிய புலம்பெயர்தல் அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு.

அதாவது, கனடாவில் குடியுரிமை அல்லது நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை தங்களுடன் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு தங்கவைக்க அனுமதி அளிக்கும் வகையில் சூப்பர் விசா திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கனேடிய குடிமகன் அல்லது கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற ஒருவரின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

அப்படி சூப்பர் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள், தங்களை கனடாவுக்கு வரவேற்கு தங்கள் மகன், மகள் அல்லது பேரப்பிள்ளைகள், தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கான செலவுகளை கவனித்துக்கொள்வோம் என்று உறுதியளிக்கும் ஒரு கடிதத்துடன், குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் மற்றும் தங்களை கனடாவுக்கு வரபேற்பவரின் கனேடிய குடியுரிமை அல்லது நிரந்தரக் குடியிருப்பு அனுமதியின் நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும்.

கனடாவில் பெறப்பட்ட, செல்லத்தக்க மருத்துவக் காப்பீடு வைத்துள்ளதற்காக ஆதாரத்தையும் சமர்ப்பிப்பது அவசியம். வருவாய் ஆதாரம் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியை கனடாவுக்கு வரவேற்கும் கனேடிய குடிமகன் அல்லது கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற நபர், தங்கள் வருவாய், தங்கள் குடும்பத்தினரின் தேவைகளை சந்திக்கப்போதுமானது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டும்.

பிற நிபந்தனைகள் கனடாவுக்கு வர விண்ணப்பித்துள்ள, கனேடிய குடிமகன் அல்லது கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்ற ஒருவரின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி, தங்கள் சொந்த நாட்டுடன் எத்தகைய உறவு வைத்துள்ளார்கள், எதற்காக கனடா வருகிறார்கள், அவர்களுடைய குடும்பம், வருவாய், சொந்த நாட்டில் அவர்களுடைய நிதி மற்றும் அரசியல் நிலைத்தன்மை ஆகியவை குறித்தும் கனடா அதிகாரிகள் சோதிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...