உலகம்செய்திகள்

ரூ.6 கோடி மதிப்பில் தங்க நகைகள், செல்போனுக்கு தங்க உறை.., மகா கும்பமேளாவில் கவரும் தங்க பாபா

Share
19 20
Share

ரூ.6 கோடி மதிப்பில் தங்க நகைகள், செல்போனுக்கு தங்க உறை.., மகா கும்பமேளாவில் கவரும் தங்க பாபா

மகா கும்பமேளாவிற்கு ரூ.6 கோடி மதிப்பிலான தங்க நகைகள் அணிந்து வந்த தங்க பாபா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அந்தவகையில், கோல்டன் பாபா’ (தங்க பாபா) என்பவர் அகாடாவில் முகாமிட்டுள்ளனர். இவரை பார்ப்பதற்கே தனி கூட்டம் அதிகரித்து வருகிறது.

இவர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.கே.நாரயண் கிரி ஆவார். இவர் தற்போது ஆன்மீக பணிகளுக்காக டெல்லியில் இருந்து வருகிறார்.

தனது கழுத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்க அணிகலன்கள், 10 விரல்களிலும் தங்க மோதிரங்கள், செல்போனுக்கு தங்க உறை என மின்னுகிறார்.

இவர் இவ்வளவு தங்கத்தை அணிந்த பின்னரும் ஆன்மிகத் துறவியாகத் தன்னை முன்னிறுத்துகிறார். இவரின் தோற்றத்தின் காரணமாக இவரை பார்ப்பதற்கு பலரும் வருகின்றனர்.

தங்க பாபா பேசுகையில், “தேசத்தை காக்கும் பிரதமராக நரேந்திர மோடியும், உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத்தும் இரண்டு துறவிகளாக ஆட்சி புரிகின்றனர்.

இவர்களால் தான் நாம் மகா கும்பமேளாவில் எந்த கவலையுமின்றி இருக்கிறோம். நாம் அவர்களுக்கும், சனாதனத்துக்கும் ஆதரவளிப்பதை தொடர வேண்டும்” என்றார்.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...