03
உலகம்செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வு!

Share

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றமான சூழல்களுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் இன்றைய தினம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன. உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 67.02 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.87 அமெரிக்க டொலராக நிலவுகிறது. மசகு எண்ணெயைத் தொடர்ந்து, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, அதன் விலை 2.859 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இந்த விலையேற்றம் உலக நாடுகளின் எரிபொருள் இறக்குமதிச் செலவுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ஈரானுக்கும் அமெரிக்கா/இஸ்ரேலுக்கும் இடையிலான நேரடி மோதல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியைப் பாதிக்கும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...