வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் செய்தியாளர் ரின் சுன் ஹி என்பவருக்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக வழங்கி கவுரவித்துள்ளார்.
70 வயதாகும் ரி சுன் ஹி, கடந்த 50 ஆண்டு காலமாக வடகொரியாவின் மிக முக்கியமான நிகழ்வுகள் சிலவற்றை செய்திகளாக வழங்கி புகழ்பெற்றவர்.
1994-ம் ஆண்டு தந்தை கிம் இல் சுங்கின் மரணம், 2006-ல் வடகொரியா முதல் அணு ஆயுத சோதனை வரை என பல்வேறு முக்கிய நிகழ்வுகளை செய்திகளாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரி சுன் ஹி செய்தியாளராக 50 ஆண்டு நிறைவு செய்ததை கௌரவிக்கும் விதமாக அவருக்கு அடுக்குமாடி குடியிருப்பை கிம் பரிசாக வழங்கியுள்ளார்.
#WorldNews
Leave a comment