பொதுமக்கள் முகக்கவசங்களை அணியும் நடைமுறையினை தற்போது, நீக்கும் சாத்தியங்கள் இல்லையென கனடாவில் ஒன்றாரியோ மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்று எதிரொலியால், முகக்கவசங்கள் அணிதல் மற்றும் தடுப்பூசிகளை பொதுமக்கள் செலுத்த வேண்டுமென அரசாங்கம் வலியுறுத்திவரும் நிலையில், முகக்கவசங்களை அணியும் நடைமுறை தற்போது நீங்கும் சாத்தியமில்லையென ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டினை தொடர்ச்சியாக முடக்க முடியாது எனவும், இயல்பு நிலையை கிரமமான அடிப்படையில் முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொவிட் தொற்றிலிருந்து முகக்கவசங்கள் மக்களைப் பாதுகாத்து வருவதாகவும், தொடர்ச்சியாக அதனை பயன்படுத்த வேண்டிய அவசியமிருக்காது எனினும், விரைவில் முகக்கவசம் அணியும் நடைமுறை தளர்த்தப்படுவதற்கான எவ்வித சாத்தியங்கள் இல்லையெனவும் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
#World