28 3
உலகம்செய்திகள்

தடையை மீறி மறைமுகமாக ரஷ்ய எரிவாயுவை வாங்கும் ஜேர்மனி

Share

தடை செய்யப்பட்ட ரஷ்ய பெட்ரோலில் இயங்கும் கனேடிய வாகனங்கள், இது எப்படி சாத்தியம் என்னும் ஒரு செய்தியை நீங்கள் சமீபத்தில் படித்திருக்கலாம்.

ஆம், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதும், ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்யா மீது தடைகள் விதித்தன. முழு ஐரோப்பாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கணிசமாக குறைத்தது.

ஆனால், கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்தாலும், ஐரோப்பிய நாடுகள் பல, ரஷ்யாவிடமிருந்து திரவ இயற்கை எரிவாயுவை வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில், பல மில்லியன் டொலர்கள் மதிப்புடைய, தடை செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெய் கனடாவில் புழங்குவதாக ஒரு செய்தி வெளியானது.

அதாவது, ரஷ்யாவின் கச்சா எண்ணெய், இந்தியா துருக்கி போன்ற நாடுகளில் சுத்திகரிக்கப்பட்டு, அங்கிருந்து கனடாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதற்கு தடையும் கிடையாது. ஆகவே, அந்த எரிபொருட்களை வாங்குவது ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடையை மீறும் செயலும் அல்ல என்பதால், ரஷ்ய எண்ணெய் மறைமுகமாக கனடாவுக்குள் நுழைகிறது.

அதேபோல, ஜேர்மனியும், தடையை மீறி, மறைமுகமாக ரஷ்ய எரிவாயுவை வாங்குவதாக, ஜேர்மனி, பெல்ஜியம் மற்றும் உக்ரைனை மையமாகக் கொண்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அதாவது, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளிலுள்ள சில நிறுவனங்கள் ரஷ்ய எரிவாயுவை வாங்குகின்றன.
அந்த நிறுவனங்களிடமிருந்து ஜேர்மனி பெருமளவில் எரிவாயுவை இறக்குமதி செய்கின்றது.

ஜேர்மன் அரசால் கட்டுப்படுத்தப்படும் ஆற்றல் நிறுவனம் ஒன்று, 2024ஆம் ஆண்டில் மட்டும், பிரான்சிலுள்ள ஒரு நிறுவனம் மூலமாக 58 டேங்கர் எரிவாயுவை வாங்கியுள்ளது.

இது, பிரான்ஸ் நிறுவனம் மூலம் 2023ஆம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து ஜேர்மனி வாங்கிய எரிவாயுவைவிட ஆறு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...