tamilni 203 scaled
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் நீடிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடு

Share

ஜேர்மனியில் நீடிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடு

ஒழுங்கற்ற புலம்பெயர்தலையும், ஆட்கடத்தலையும் கட்டுப்படுத்துவதற்காக, எல்லைக்கட்டுப்பாடுகளை ஜேர்மனி பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நேற்று(14) ஜேர்மனி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

அக்டோபர் மாதத்தின் மத்தியில் சுவிட்சர்லாந்து, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுடனான எல்லைகளில் கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஜேர்மனி அறிவித்திருந்தது.

முதலில், 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர், அக்டோபர் மாத இறுதிவரை 20 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது, எல்லைக் கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி அறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை, ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் மாகாண தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றைத் தொடர்ந்து குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...