வேலை தேடுவோருக்கான புதிய விசா முறையை அறிமுகப்படுத்தியுள்ள ஜேர்மனி
ஜேர்மனி (Germany) புதிதாக அறிமுகப்படுத்திய German Opportunity Card (Chancenkarte) விசா திட்டத்தின் தகுதி அளவுகோல்கள் தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், இந்த விசா திட்டமானது திறமையான தொழிலாளர்களை (skilled workers) ஜேர்மனிக்கு வரவேற்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது புள்ளி அடிப்படையிலான (points-based) தேர்ச்சி முறையில் செயல்படும்.
இந்த Opportunity Card விசா முதல் கட்டமாக ஒரு வருடத்திற்கு வழங்கப்படும்.
அத்தோடு கல்வி, வேலை அனுபவம், மொழி திறன் மற்றும் வயது போன்ற காரணிகளின் அடிப்படையில் வழங்கப்படும்.
வேலையாட்கள் குறைவாக இருக்கும் தொழில்களில் அனுபவம் உள்ளவர்கள், முன்னதாக ஜேர்மனியில் வாழ்ந்த அனுபவம் உள்ளவர்கள் மற்றும் தகுதியான வாழ்க்கை துணையுடன் விண்ணப்பிக்கும் நபர்கள் கூடுதல் புள்ளிகளைப் பெறலாம்.
விண்ணப்பிக்க கல்வித் தகுதி, வேலை அனுபவ சான்றுகள், மொழித் தேர்ச்சி, நிதி ஆதாரம் மற்றும் மருத்துவ காப்பீட்டுச் சான்றுகள் தேவையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, விண்ணப்பங்கள் ஜேர்மனி குடியேற்ற இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வெளிநாட்டு ஜேர்மன் தூதரகங்கள் சேவை கட்டணத்துடன் விண்ணப்பங்களை செயல்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம், திறன்மிகுதொழிலாளர்களுக்கு ஜேர்மனியில் வேலை வாய்ப்புகளைத் தேடுவதற்கான அமைப்புசார்ந்த வழியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.