உலகம்செய்திகள்

1.3 பில்லியன் யூரோ மதிப்புள்ள புதிய இராணுவ ஆயுதங்கள்! அறிவிப்பை வெளியிட்ட ஜேர்மனி

Share
4 13 scaled
Share

1.3 பில்லியன் யூரோ மதிப்புள்ள புதிய இராணுவ ஆயுதங்கள்! அறிவிப்பை வெளியிட்ட ஜேர்மனி

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவ ஜேர்மனி 1.3 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள இராணுவ உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் நிலையில், இதுவரை 10,000க்கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நேச நாடுகளிடம் போருக்காக உதவி கேட்டு வருகிறார். மேலும் அவர் புடினை கொல்வதற்கான அனைத்து உரிமைகளும் தங்களுக்கு இருப்பதாக கூறிய பரபரப்பை ஏற்படுத்தினார்.

மோசமான நாடு என பெயர் வாங்கியுள்ள ஜேர்மனி: அதை மாற்ற அரசியல்வாதிகள் விடுத்துள்ள கோரிக்கை
மோசமான நாடு என பெயர் வாங்கியுள்ள ஜேர்மனி: அதை மாற்ற அரசியல்வாதிகள் விடுத்துள்ள கோரிக்கை
இந்த நிலையில் உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்குவதாக ஜேர்மனி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜேர்மனின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் (Boris Pistorius) கூறுகையில், ‘உக்ரைனுக்கு 1.3 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள மற்றொரு இராணுவ உதவிப் பொதியை (Military aid package) ஜேர்மனி வழங்கும், அதில் நான்கு கூடுதல் IRIS-T வான் பாதுகாப்புப் பிரிவுகளும் அடங்கும்.

ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிரான உங்கள் போராட்டத்தில் இது உங்களுக்கு உதவும் என்று நான் நம்புகிறேன். உக்ரைனுடன் நாங்கள் நிலையான மற்றும் நம்பகத்தன்மையுடன் நிற்கிறோம் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த இராணுவப் பொதியில் 20,000 பீரங்கி குண்டுகள் (155mm) மற்றும் டாங்கி எதிர்ப்பு மைன்ஸும் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கீவிற்கு இதுவரை 8 IRIS-T அமைப்புகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது, அவற்றில் மூன்று வழங்கப்பட்டுள்ளன. ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைன் முக்கியமாக அவற்றைப் பயன்படுத்துகிறது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...