உலகின் கவனத்தை ஈர்த்த 2 வயது சிறுவனின் ஓவியம்

24 665a1fe751172

உலகின் கவனத்தை ஈர்த்த 2 வயது சிறுவனின் ஓவியம்

ஜெர்மனியை (Germany) சேர்ந்த 2 வயது சிறுவன் வரைந்த ஓவியங்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து சாதனை படைத்துள்ளது.

லாரண்ட் ஸ்வார்ஸ் என்ற சிறுவனின் கலைப்பயணம் கடந்த ஆண்டு விடுமுறையின் போது தொடங்கி உள்ளது.

இதனையடுத்து, சிறுவனின் ஓவிய ஆர்வத்தை அறிந்த அவனது பெற்றோர் சிறுவனுக்காகவே ஒரு பிரத்தியேக ஓவிய அறையை ஒதுக்கி கொடுத்துள்ளனர்.

அந்த சிறுவன் டைனோசர்கள், குதிரைகள் போன்ற விலங்குகளின் ஓவியங்களை அசத்தலாக வரைந்தான்.

தொடர்ந்து சிறுவன் வரைந்த ஓவியங்களை பார்த்து வியந்த அவனது தாயார் லிசா மகனின் படைப்புகளை வெளிப்படுத்த எக்ஸ் தளத்தில் தனி பக்கம் உருவாக்கினார்.

அதில்,சிறுவன் வரைந்த ஓவியங்களை பதிவிட்ட போது அவற்றை பார்த்த ஆயிரக்கணக்கான பயனர்கள் சிறுவனின் ஓவிய திறமையை பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முனிச்சில் நடந்த மிகப்பெரிய கண்காட்சியில் லாரண்டின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம் பிரபலமான அந்த சிறுவனின் ஓவியங்கள் 7 ஆயிரம் டொலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.82 லட்சம்) டொலருக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

Exit mobile version