1 7 scaled
உலகம்செய்திகள்

பாலஸ்தீனத்தில் காண்பது இனப்படுகொலை! நெதன்யாகு போர் குற்றவாளி – கொந்தளித்த முன்னாள் அமைச்சர்

Share

நெதன்யாகுவை போர் குற்றவாளியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என ஸ்பெயினின் முன்னாள் அமைச்சர் Ione Belarra ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலால் பலி எண்ணிக்கை 20,000த்தை நெருங்கியுள்ளது. இதற்கிடையில் விடுவிக்கப்பட்ட தங்கள் பிணைக்கைதிகளை இஸ்ரேல் இராணுவமே தவறுதலாக சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தாங்க முடியாத சோகம் என்று வேதனை தெரிவித்தார்.

இந்த நிலையில் ஸ்பெயினின் முன்னாள் சமூக உரிமைகள் அமைச்சர் மற்றும் உளவியலாளரான Ione Belarra பாலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலையை கண்டனம் செய்வது முக்கியம் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பாலஸ்தீனத்தில் மக்கள் கொல்லப்படுவது குறித்து அவர் கூறுகையில், ‘நாம் நம் மகன்கள் மற்றும் மகள்களுக்கு என்ன சொல்வோம்? பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டனர், யாரும் எதுவும் செய்யவில்லை என்பதை எப்படி விளக்குவோம்? ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகள், தங்கள் உடலின் பாகங்களையும், டஜன் கணக்கான குடும்ப உறுப்பினர்களையும் இழந்துள்ளனர்.

நெதன்யாகுவுடனான தூதரக உறவுகளைத் துண்டித்து, அவரை முன் நிறுத்தும் திறன் கூட இல்லாத நிலையில், பாலஸ்தீனம் சர்வதேச சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கோருவதில் உள்ள மகத்தான முரண்பாட்டை நாம் ஏற்க முடியாது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவரை ஒரு போர் குற்றவாளி என்று தீர்மானிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...