24 6640422546132
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சை முதல் பயனாளி மரணம்

Share

அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சை முதல் பயனாளி மரணம்

அமெரிக்காவில் (America) மரபணு மாற்றப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையின் முதல் பயனாளி சிகிச்சை முடிந்து இரண்டு மாதங்களுக்குப் பின்னர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது குடும்பத்தினரும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை வைத்தியர்களும் நேற்று (11) இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்க மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் 62 வயதான ரிச்சர்ட் ரிக் ஸ்லேமேன் (Richard Rick Slayman) என்பவருக்கே கடந்த மார்ச் மாதம் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, பன்றி சிறுநீரகம் குறைந்தது இரண்டு ஆண்டுகள் செயற்படும் என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எனினும், மாற்று அறுவை சிகிச்சையின் விளைவாக அவர் இறந்ததற்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை என்று நிபுணர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவில் 100,000இற்கும் மேற்பட்டவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக தேசிய காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

இவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் தவணை வருவதற்கு முன்பே இறந்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...