உலகம்செய்திகள்

ஆயிரம் கோடிக்கு சொந்தக்கார நடிகர்: பட்டினி கிடந்ததாகக் கூறும் உடற்கூறு ஆய்வறிக்கை

Share
22
Share

80 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான சொத்துக்கள் கொண்ட பிரபல நடிகர் ஒருவர், நீண்ட நாட்களாக சாப்பிடாமல் பட்டினியாக இருந்துள்ளார் என்பது அவரது உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

பிரபல நடிகரான ஜீன் ஹாக்மேனும் (Gene Hackman, 93), அவரது மனைவியான பெற்சியும் (Betsy Arakawa, 63), அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்திலுள்ள Santa Fe என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த நிலையில், பிப்ரவரி மாதம், அவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது.

இந்நிலையில், ஜீன் ஹாக்மேனின் உடற்கூறு ஆய்வறிக்கையில், அவரது உடலில் அசிட்டோன் என்னும் வேதிப்பொருள் 5.3 mg/dl இருப்பது தெரியவந்துள்ளது.

ஒருவர் நீண்ட நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்தால்தான் அவரது உடலில் இந்த அளவுக்கு அசிட்டோன் இருக்குமாம்.

ஆக, ஜீன் நீண்ட நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அவருக்கு வேறு பல உடல் நலக்குறைவுகளும் உள்ளது உண்மைதான் என்றாலும், 80 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான சொத்துக்கள் கொண்ட ஜீன், கடைசியில் உணவு கூட இல்லாமல் உயிரிழந்துள்ளார் என்னும் தகவல் சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

80 மில்லியன் டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 23,96,64,08,000.00 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...