எதிர்வரும் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை உச்சமடையும் எனவும் சுமார் 80 இலட்சம் பேர் கடுமையான உணவுப் பிரச்சினையை எதிர்கொள்ள கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரிக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது.
குறிப்பாக‚ சோமாலியாவில் சுமார் 20 இலட்சத்திற்கு மேற்பட்டோர் உணவு மற்றும் குடிநீர் வசதியின்றித் தவிக்கின்றனர்.
பல இலட்சக்கணக்கான கால்நடைகள் உயிரிழக்கிறது. ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் உணவு இன்மையால் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளார்கள் என தெரிவித்துள்ளது.
மேலும் சோமாலியா நாட்டு அதிகாரிகளின் அறிக்கையின் படி இந்த ஆண்டும் போதியளவு மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறவில்லை என்பதை அறியகூடியதாக உள்ளது.
இதனால் விவசாய நடவடிக்கைகள் படுமோசமான நிலையில் காணப்படுவதாகவும்‚ சோமாலியா கடுமையான பஞ்சத்தினை நோக்கி நகர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#WorldNews