பிரித்தானியாவில் பலருக்கு மகிழ்ச்சியான செய்தி

tamilni 322

பிரித்தானியாவில் பலருக்கு மகிழ்ச்சியான செய்தி

பிரித்தானியாவில், முதன்முறையாக பெண் ஒருவருக்கு கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது.

இங்கிலாந்தில் வாழும் பெண் ஒருவர் அபூர்வ நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரால் தாயாக முடியாத நிலைமை இருந்தது. அதாவது, அவரது கருப்பை குழந்தையை சுமக்கும் அளவில் இல்லை.

இந்நிலையில், அவரது அக்கா, தனது கர்ப்பபையை தன் சகோதரிக்கு தானமாக வழங்க முன்வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து, மருத்துவர்கள் உட்பட 20 பேர் கொண்ட குழு ஒன்று, 17 மணி நேரம் நிகழ்ந்த அறுவை சிகிச்சை ஒன்றில், அக்காவின் கருப்பையை தங்கைக்கு பொருத்தியுள்ளனர்.

கர்ப்பப்பை பொருத்தப்பட்டு இரண்டு வாரங்களில் தங்கைக்கு மாதவிடாயும் வந்துவிட்டது. அதாவது, அவரது இனப்பெருக்க உறுப்புகள், தானமாக பெறப்பட்ட கர்ப்பப்பை வரை, சரியாக இயங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால், கர்ப்பப்பை புற்றுநோய் முதலான காரணங்களால் இளம் வயதிலேயே கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண்களும், இந்த அறுவை சிகிச்சை மூலம், கர்ப்பப்பை தானமாக பெற்று குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

Exit mobile version