ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

download 4 1 3

ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து!

தெற்கு ரஷ்யாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவின்  கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் அருகே உள்ள இல்ஸ்கி சுத்திகரிப்பு நிலையத்தில் குறித்த தீவிபத்து நேர்ந்துள்ளது. ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீவிபத்தின் காரணமாக உயர்சேதம் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ரஷ்யாவின் பிரதான நிலப்பகுதியை  கிரிமியாவுடன் இணைக்கும் பாலம் அருகே மேற்குப் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கு தீப்பிடித்த இரண்டு நாட்களில் இத்தகைய சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Exit mobile version