தீ விபத்து! – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உடல் கருகி பலி

1742097 fire123

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தீ விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று நள்ளிரவு 2.45 மணியளவில் திடீரென்று வீட்டில் தீப்பற்றிய நிலையில், 5 முதல் 7 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளும், 18 முதல் 79 வயதிற்குட்பட்ட 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 3 இளைஞர்கள் எவ்வித பாதிப்புமின்றி பாதிக்கப்பட்ட வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தீ விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version