1 6 1 scaled
உலகம்செய்திகள்

சூட்கேசுக்குள் பெண் மருத்துவரின் நிர்வாண உடல்

Share

சூட்கேசுக்குள் பெண் மருத்துவரின் நிர்வாண உடல்

பிரேசில் நாட்டில் பெண் மருத்துவர் ஒருவரின் நிர்வாண உடல் சூட்கேசுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் அவரது குடியிருப்பில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவரின் முகத்தில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸா பாலோவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஆகஸ்டு 18ம் திகதி 28 வயதேயான தல்லிதா பெர்னாண்டஸ் என்ற இளம் மருத்துவரின் சடலம் மீட்கப்பட்டது.

தல்லிதா திடீரென்று மாயமான நிலையில், அவரது நண்பர்களே பொலிசாருக்கு தகவல் அளித்து, விசாரிக்க கோரியுள்ளனர். இந்த நிலையில், அவரது குடியிருப்புக்கு சென்ற பொலிசார், சூட்கேசுக்குள் அவரது நிர்வாண உடல் அடைக்கப்பட்ட நிலையில் மீட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அவரது காதலன் மார்டின் சில்வா மீது சந்தேகம் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மதியத்திற்குமேல் 4.15 மணியளவில் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு பொலிசார் வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பூட்டை உடைத்து உள்ளே புகுந்த பொலிசார், குளியலறையில் ரத்தக்கறை படிந்திருப்பதை கவனித்துள்ளனர். படுக்கையறையிலும் ரத்தக்கறை காணப்பட்டுள்ளது. மேலும், அந்த அறையும் பூட்டப்பட்டிருந்துள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் மருத்துவர் தல்லிதாவின் நிர்வாண சடலம் சூட்கேஸ் ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், தல்லிதாவின் காதலனை விசாரணைக்காக தொடர்புகொள்ள முயன்ற பொலிசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

மேலும், மருத்துவர் தல்லிதாவை தொடர்புகொண்ட ஒருவருக்கு, வேலைப்பழு அதிகமாக உள்ளது, இப்போது பதிலளிக்க வாய்ப்பில்லை என குறிப்பிட்ட அவரது குறுந்தகவல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்றைய நாள் அவர் பணிக்கு செல்லவில்லை என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவத்திற்கு முன் காலையில் சண்டை சத்தம் குறித்து அக்கம்பக்கத்தினர் புகார் செய்ததாக கட்டிடத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த குடியிருப்பில் இருந்து மருத்துவரின் காதலன் தனியாக புறப்பட்டு சென்றதையும் நேரில் பார்த்தவர்கள் பொலிசாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...