dgrthfyttj
உலகம்

கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் மகனை பார்க்க தந்தைக்கு தடை

Share

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கனடா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

தடுப்பூசி செலுத்தாததால் 12 வயது மகனை பார்க்க தந்தைக்கு அதிரடி தடை

ஒமைக்ரான் உருமாற்றம் வைரசால் உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் அடுத்த அலை உருவாகியுள்ளது. அமெரிக்காவில் தினசரி பாதிப்பு மில்லியனை தாண்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

ஒமைக்ரான் மின்னல் வேகத்தில் பரவினாலும், மருத்துவமனையில் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ஆனால், கனடாவில் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு விதித்துள்ளது. கொரோனா
தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மருத்துவ வரி செலுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாததாலும், பாதுகாப்பு நடவடிக்கைக்கு எதிராக பேசியதாலும் தந்தை ஒருவர் 12 வயது சிறுவனை சந்திக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

கனடாவில் 12 வயது, நான்கு வயது, ஏழு மாதம் குழந்தைகளுடன் பெண் ஒருவர் வசித்து வருகிறார். கனடாவில் ஐநது வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்மணியின் 12 வயது சிறுவனுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளையில் 12 வயது சிறுவனின் தந்தை, அந்த சிறுவனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை தனது மகனை விடுமுறை நாட்களில் பார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும் என முறையிட்டுள்ளார்.

அப்போதுதான் அந்த பெண்மணி, அவர் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைக்கு எதிராக உள்ளார். இதனால் தனது மகனை சந்திக்க தடைவிதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் நீதிமன்றம் பிப்ரவரி மாதம் வரை மகனை பார்க்க தடைவிதிக்கப்படுகிறது. அதற்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளை பாதுகாக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், தந்தை தடுப்பூசி செலுத்தாமல் மகனை சந்திப்பது, அந்த குழந்தையின் உடல் நலத்திற்கு நல்லது கிடையாது எனக்கூறி சந்திக்க தடைவிதித்துள்ளது.

கனடாவின் கியூபெக்கில் 18 வயதிற்கு மேற்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட போதிலும், வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பகுதி நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டள்ளது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8
இலங்கைஉலகம்செய்திகள்

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையரின் மோசமான செயல்

ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் பல சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவர் மீது...

Murder Recovered Recovered Recovered 15
உலகம்செய்திகள்

ஈரானின் திடீர் முடிவு.. சர்வதேசத்திடமிருந்து அணுசக்தி தகவல்களை மறைக்க திட்டம்!

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான ஒரு சட்டத்திற்கு ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன்...

Murder Recovered Recovered Recovered 11
உலகம்செய்திகள்

தரையிறங்குவதற்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளான சோமாலிய விமானம் : மூவர் பலி

சோமாலியாவில் ஆபிரிக்கா இராணுவத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும்...

Murder Recovered Recovered Recovered 10
உலகம்செய்திகள்

கனடா பெண்ணுக்கு யாழில் நேர்ந்த சோகம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம்(02) உயிரிழந்துள்ளார். கண்டி...