ஜேர்மனி அரசு, விவசாயத்துக்கான மற்றும் காடுகளில் மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரங்களை வாங்குவதற்காக அளித்துவந்த வரிச்சலுகைகள் மற்றும் டீசல் மானியத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதை எதிர்த்து கடந்த மாதம் ஜேர்மன் விவசாயிகள் பெர்லினில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.
கடந்த மாதம் 18ஆம் திகதி, ஜேர்மனியின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ட்ராக்டர்களுடன் குவிந்தார்கள்.
அரசு, விவசாயத்துக்கான மற்றும் காடுகளில் மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரங்களை வாங்குவதற்காக அளித்துவந்த வரிச்சலுகைகள் மற்றும் டீசல் மானியத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதை எதிர்த்து அவர்கள் பெர்லினில் ஒன்று திரண்டார்கள். அதனால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.
விவசாயிகளின் போராட்டங்களைத் தொடர்ந்து, அரசு வரிச்சலுகைகள் மற்றும் டீசல் மானியத்தை நிறுத்துவதாக இருந்த திட்டத்தில் பாதி கைவிடப்பட்டுள்ளது.
அதாவது, விவசாயத்துக்கான மற்றும் காடுகளில் மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரங்களை வாங்குவதற்காக அளித்துவந்த வரிச்சலுகைகள் தொடரும் என அரசு அறிவித்துள்ளது.
அதே நேரத்தில், எரிபொருள் மானியம் முழுமையாக நிறுத்தப்படாது என்றும், ஆனாலும், படிப்படியாக அது குறைக்கப்படும் என்றும் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸின் செய்தித்தொடர்பாளரான Steffen Hebestreit தெரிவித்துள்ளார்.