இன்று லத்தின் அமெரிக்க நாடான டொமினிகன் குடியரசில் இடம்பெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவருடன் அவரது மனைவி மற்றும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
தன்னுடைய மனைவி, மகன் உட்பட தன்னுடைய நண்பர்களுடன் சொகுசு விமானத்தின் மூலம் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லெண்டோ நகருக்கு புறப்பட்டுள்ளார்
விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானத்தை தரையிறக்க முற்படுகையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#WorldNews
Leave a comment