பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்றய தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவர் லயான் நகரில் பிரெஞ்சு உணவுகள் மற்றும் பண்பாடு ஆகியவற்றை பிரபலமாக்குவது குறித்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச் சம்பவத்தின் போது வீசப்பட்ட முட்டை இமானுவேல் மக்ரோங் மீது உடைந்து விழாமல் அவரின் தோளில் பட்டு கீழே விழுந்தது என்று கூறப்படுகின்றது.
“என்னிடம் அவர் ஏதாவது சொல்ல விரும்பினால், அவர் வந்து சொல்லலாம்,” என்று அப்போது அதிபர் சொன்னதைக் கேட்க முடிந்ததாக அங்கிருந்த செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லயான் மேக் ஊடகம் இச் சம்பவம் குறித்த காணொளியை வெளியிட்டுள்ளது,
அதிபர் மீது முட்டை வீசியதற்காக சர்வதேச உணவு மற்றும் விடுதிகள் தொழில் கண்காட்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிபர் மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்திய நபர் குறித்த அடையாளங்கள் மற்றும் அவரது நோக்கம் குறித்த தகவல் எதுவும் அதிகாரிகளால் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
கடந்த ஜீன் மாதம் அதிபர் மேக்ரான் கன்னத்தில் ஒருவர் அடித்தார் என்ற குற்றச்சாட்டில் அந்த நபருக்கு 4 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.