ரஷ்யாவுக்கு உதவிய இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை!

images 2 3

உக்ரைன் மீதான போரில் ரஷ்ய இராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட மொத்தம் 45 நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (European Union) தடை விதித்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தப் போரைக் கட்டுப்படுத்தத் தீவிர முயற்சி எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவிற்கு அழுத்தம் தரும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இந்தத் தடைகள், ரஷ்யாவிற்குப் பொருளாதார ரீதியில் உதவும் நிறுவனங்கள் மீதும் நீடிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் அடிப்படையிலேயே மூன்று இந்திய நிறுவனங்கள் உள்ளிட்ட 45 நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version