1500x900 44535787 chennai 07
உலகம்செய்திகள்

ஐரோப்பிய விதிகளை மீறிய எலான் மஸ்கின் எக்ஸ் தளத்திற்கு ரூ. 4,140 கோடி அபராதம்!

Share

உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் (X) வலைத்தளம், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டங்களைச் (Digital Services Act – DSA) சரியாகப் பின்பற்றவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டதையடுத்து, ஐரோப்பிய ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனையடுத்து எக்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து ஐரோப்பிய ஆணையம் பல மாதங்களாக விசாரணை நடத்தியது.விதிமுறைகளை மீறியதற்காக, எக்ஸ் நிறுவனத்துக்கு 120 மில்லியன் யூரோ, அதாவது இலங்கை பண மதிப்பில் சுமார் ரூ.4,140 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஆணையம் அறிவித்துள்ளது.

ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், தளத்தில் பாதுகாப்பு குறைபாடுகள், பயனர்களை தவறாக வழிநடத்தும் ஏமாற்றும் வடிவமைப்புகள் (Deceptive Designs), விசாரணைக்குத் தேவையான தகவல்களை வழங்க மறுத்தல் ஆகியவற்றின் காரணமாக இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை (DSA) மீறிய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அபராதங்களில் இதுவும் ஒன்றாகும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...