download 5 1 18
உலகம்செய்திகள்

இலத்திரனியல் முச்சக்கரவண்டி!

Share

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளை அறிமுகம் செய்வது குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மூன்று சக்கரங்களை உடைய சிறிய வாகனங்களை பரீட்சார்த்த அடிப்படையில் முக்கிய நகரங்களில் சோதனையிடத் திட்டமிட்டுள்ளது.

முச்சக்கர வண்டிகளுக்கு அனுமதி அளிப்பதற்காக சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் இந்த விடயம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழலுக்கு பாதகம் இல்லாத மற்றும் மலிவான போக்குவரத்து வாய்ப்புகள் குறித்து வரவு செலவு திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இதன்படி சிறிய ரக வாகனங்களை வீதியில் அறிமுகம் படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.

UMV எனப்படும் Urban Mobility Vehicles என்ற வாகனத்தையே நகர நிர்வாகம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இது ஓர் இலத்திரனியல் முச்சக்கர வண்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகபட்சமாக  மணிக்கு 32 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடிய இந்த வாகனம் ஒரு இருக்கையை மட்டும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், சிறிய ரக வாகனத்தை அறிமுகம் செய்வது தொடர்பில் பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...