அரசர் சார்லஸ் மீது முட்டை வீச்சு- ஒருவர் கைது

uk man arrested

இங்கிலாந்தின் வடக்கு நகரமான யார்க்க்ஷைரில் நடந்து சென்ற அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி ராணி கமிலா ஆகியோரை நோக்கி முட்டைகளை வீசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டிஷ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசரும் அவரது மனைவியும் மிக்லேகேட் பார் வழியாக யார்க்க்ஷைர் நகருக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அரசர் வரும்போது முட்டைகள் பறந்து வந்து விழுவது தெரிகிறது.

ஆனால் அந்த முட்டைகள் அரச குடும்பத்தினர் மீது படவில்லை. இதையடுத்து முட்டைகளை வீசிய நபரை பொலிஸார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

#world

Exit mobile version